Thursday, November 22, 2007

கல்லூரி மழையின் சில துளிகள்

வலையுட்டம் எழுத வேண்டும் என்று முடிவெடுத்தாகிவிட்டது.
என்ன எழுத? கதையா கவிதையா கட்டுரையா....
நம்ம கிட்ட மாட்டிக்கிட்டு என்னோட எழுத்துக்களை படிக்க
வேண்டியது நம்ம வலை நண்பர்களோட காலத்தின் கட்டாயம். நமக்கென்ன? எழுதித் தள்ளுவோம்.
முதல்ல வர்ரது என்னோட கல்லூரி நினைவுகள் சில.

அப்ப ஃப்ரெண்ட்ஸ் எட்டு பேர் சேர்ந்து காலேஜ் படிக்கும் போது ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம்.
அந்த வீட்டுல கீழ ஓனர். முதல் மாடி நாங்க. அதுக்கு மேல மொட்டை மாடி.அந்த மொட்டை மாடியில் அழகா நடுவுல அந்தக் காலத்து ஸ்டைல்ல ஒரு சின்ன மண்டபம் தூண்லாம் வச்சு.
எங்க ஹால் ரூம்லாம் தாண்டி பின்னாடி ஒரு ஒப்பன் ஸ்பேஸ். அங்க வாஷ் பேசின் . அந்த ஒப்பன் ஸ்பேஸ்லயிருந்து தான் மொட்டை மாடிக்குப் படி.

ஒரு சனிக்கிழமை மதியம். நாடார் மெஸ்ல ஃபுல் மீல்ஸ் கட்டிட்டு வந்து கொஞ்ச நேரம் ரம்மி விளையாடிவிட்டு தூங்கினோம். ரம்மியா? படிப்பெல்லாம் இல்லையான்னு நீங்க கேட்டிங்களா இப்ப? படிப்பெல்லாம் பரீட்சை வரும்போது தாங்க. மத்த நேரம் எவ்வளவு வேலை இருக்கு.. காலேஜ் போகனும் ... ஸைட் அடிக்கனும்..சினிமாவுக்குப் போகனும்...
சரி.நம்ம மேட்டருக்கு வருவோம். எங்க செட்ல கோபால்னு மெட்ராஸ் மச்சான் ஒருத்தன்.வாயத் திறந்தா CM எனக்கு சொந்தக்காரரும்பான் கமிஷனர் எங்க மாமாம்பான்..
ரீல் மன்னன்...ஆனா எதாவது பிரச்னைன்னா முதல்ல எடத்தக் காலி பண்ணியுருவான்.
சாயந்திரம் 5 மணி இருக்கும். தலைவர் கோபால் தூங்கி எந்திருச்சு வந்து வாஷ் பேஸின் கிட்ட நின்னுக்கிட்டு இருந்தாரு.
அப்ப தான் மாடியில இருந்து நம்ம அழையா கெஸ்ட்
Mr.Monkey கூட இன்னொரு ஃப்ரெண்டையும் கூட்டிக்கிட்டு படியில இறங்கி வந்தாரு. உள்ள இருந்து இதப் பார்த்துட்டு உடனே நான் ஒப்பன் ஸ்பேஸ் க்லோஸ் பண்ற கதவச் சாத்திட்டேன்.கோபால் வெளிய நின்னத நான் பார்க்கல.
Mr.Monkeys ரெண்டு பேரும் படியிலயே உட்கார்ந்துட்டாங்க.
சத்தம் போட்டா அட்டாக் பண்ணியுருவாங்களோன்னுட்டு நம்ம கோபால் மெதுவா "டேய் கதவத் திறடா..நான் இங்க நின்னுட்டு இருக்கேன்".
திறக்கப் போன என்ன இன்னொரு ஃப்ரெண்டு...டேய் திறக்காத...ஒன்னு கதவத் திறந்தா Mr.Monkeys உள்ள வந்துருவாங்க...இன்னொன்னு நேத்து கோபால் பெர்த்டேக்கு A1 ஹோட்டல்ல ட்ரீட் கேட்டோம்..சினிமா கேட்டோம்.ஒன்னும் செய்யல அவன்.கிடக்கட்டும் விடுன்னான்.எனக்கும் சரிதான்னுப் பட்டுது.திறக்கல.யாரையும் திறக்கவும் விடல.
சத்தம் போடாம 15நிமிஷம் வாய மட்டும் லேசா திறந்து ப்ளீஸ்டா...திறங்கடா...ன்னு அவன் கெஞ்சுனது...
Mr.Monkeys நகராம நமக்கு ஹெல்ப் பண்ணுனது...
அப்புறம் நம்ம கிருஷ்ணன் போய் கதவத் திறந்துவிட்ட வுடன ஜெட் ஸ்பீட்ல சாயந்திர நேரத்துல கூட வேர்த்துபோய் உள்ள வந்து எங்களையெல்லம் துரத்தி துரத்தி கம்பால கோபால் அடிச்சது....
ஆஹா.......எவ்வளவு இனிமையான நாட்கள்...
மீண்டும் சந்திப்போம் என் நண்பர்களே.....

Friday, November 9, 2007

Enathu Muthal Blog......Nanbarkale....

Iniya Vanakkam....
Oru varudamaaka nalla blogs padithukkondirukkiren.
Aanal innum enathu ezhuthukkal blog il varavillay.. varavendum endru ninaithathillai...
Ethanai iniya seithikal....kallori ninaivukal.....evvalavu per ezhithukiraarkal...
enathu palli padippu kallori padippu...ellam poop poovai malarkinrana..
nalla oru melody yaana oru paattai malai velaiyil ketkum makilchi ippadippatta blog padikumpothu kidaikkirathu..
enathu ezhuthu itho thodangki vittathu...
Pon vanam panneer thuuvuthu inneram...
nanri..
meendum santhippom.
Raj